எப்போதெல்லாம் தல – தளபதி படங்கள் திரைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையில் மோதல் வந்துவிடுகிறது. அந்த வகையில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. இதே போன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், தான் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு டுவிட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் அஜித் படம் வெளியாக இருப்பதால் #ஆகஸ்ட்8பாடையகட்டு என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்ய, பதிலுக்கு #RIPActorVijay என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. இதையடுத்து #LongLiveVijay என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. இதற்கு பலரும் ஆதரவு கொடுத்தனர்.
சென்னை புழல் அருகில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அந்த முகாமில் அஜித் ரசிகரான உமா சங்கர் (32), விஜய் ரசிகரான ரோஷன் (34) ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். உமா சங்கர் விஜய் பற்றி தவறாக விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த விஜய் ரசிகர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து உமா சங்கரின் கழுத்து, மார்பு, தலை என்று பல இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த உமா சங்கரை அருகில் இருந்தவர்கள் ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், அவரது உடல் மோசமான நிலையில் இருந்ததால், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Tags:
Cinema News