பீஸ்ட் இயக்குனர் நெல்சன், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருக்கும் ஒரு புதிய புகைப்படத்தை பகிர்ந்ததோடு 100 நாட்கள் படப்பிடிப்பும் முடிந்தது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த பீஸ்ட் திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
தளபதி விஜயின் 65 ஆவது படமான பீஸ்ட் ஒரு கேங்ஸ்டர், திரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பீஸ்ட் படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் ரசிகர்களும் இந்த பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி காத்திருகிரார்கள்.
தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புதிய புகைப்படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் விஜய் ட்ரம்ஸ் முன் அமர்ந்திருப்பது போலவும், பூஜா மைகை பிடித்து பாடுவாது போலவும் காணலாம். நெல்சன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் புகைப்படத்தில் காணலாம்.
அதோடு தனது டிவிட்டரில் நெல்சன் கூறியிருப்பதாவது: " இது 100வது நாள் படப்பிடிப்பு" இந்த அற்புதமான மனிதர்களுடன் 100 நாட்கள் படபிடிப்பு மிகவும் வேடிக்கையாக இருந்தது.
Tags:
Cinema News