சிவகார்த்திகேயன் நடிப்பில், அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 'டான்' படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் துவங்கியது. அதனை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்து வருகிறது.
Tags:
Cinema News