Nayanthara: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து வரும் புதிய அப்டேட்

Nayanthara: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து 'நான் பிழை' என்ற பாடல் நாளை வெளியாகும் என்று விக்னேஷ் சிவன் அதிகார பூர்வமாக  அறிவித்துள்ளார்

nayanthara

விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை  விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். விகனேஷ் சிவன் எழுதி இயக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இருந்து 'நான் பிழை' பாடல் எப்போது வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இரண்டு கதாநாயகிகளான சமந்தா மற்றும் நயன்தாரா நடித்திருப்பதால் ரசிகர்கள் படத்தை காண மிகுந்த ஆர்வதோடு இருக்கின்றனர். அதோடு நானும் ரௌடிதான் படத்திற்க்கு பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து பணியாற்றும் படம் இது தான். இந்த படம் 2020 இல் ஆரம்பித்த நிலையில் கோவிட் பிரச்சனையால் லாக்டவுன் போட்டதால் படபிடிப்பு தாமதமானது. பின்னர் 2021 கிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று அறிவித்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தாமதமான நிலையில் தற்பொழுது படத்தை 2022 காதலர் தின பரிசாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு காதல் பாடல் வெளியாகியதோடு அனிருத் இசையமைத்து தானே பாடி ஆடிய டூ டூ டூ பாடல் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாங்கியது. படத்தில் இருந்து 'நான் பிழை' என்ற பாடல் நாளை (ஜனவரி 3) வெளியாகும் என்று விக்னேஷ் சிவன் அதிகார பூர்வமாக  அறிவித்துள்ளார்.
அதோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கூடிய விரைவில் படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.








கருத்துரையிடுக

புதியது பழையவை