விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தளபதி விஜய்

விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். 

Pocket Cinema News

தளபதி விஜய்க்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ளது. அங்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா மற்றும் துணை செயலாளராக இருந்து வந்த குமார் ஆகிய இருவரும் பலவருடங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர். 

ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ராஜாரவி மற்றும் குமார் ஆகியோரை அந்த பொறுப்பில் இருந்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனத் நீக்கம் செய்துவிட்டார். இதனால் இரண்டு பேரையும் வீட்டை காலி செய்யும்படி நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கபட்டது. 

ஆனால் அவர்கள் வீட்டை காலிசெய்யவில்லை இதனால் நடிகர் விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் விருகம்பாகம் காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர். அதில் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வரும் இரண்டு பேரையும் காலி செய்தது தரும்படி கூறியிருந்தார். 


 

கருத்துரையிடுக

புதியது பழையவை