Simbu: திடீரென்று நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி: திரையுலகம் அதிர்ச்சி!

Simbu: உடல்நலக் குறைவு காரணமாக திடீரென்று சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Simbu

கெளதம் மேனன் இயக்கதில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் படம் வெந்து தணிந்தது காடு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. இந்த படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் அடுத்த படத்திற்கு வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். 

தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து, கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைய்யகிறார் என்பது குறிப்பிட தக்கது, இவர்கள் கூட்டணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு ஆரம்பத்தில் 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்ற தலைப்பை சுற்றி இருந்தார்கள். அதன்பிறகுதான் படத்தின் தலைப்பை மாற்றி 'வெந்து தணிந்தது காடு' என பெயர் வைத்தார்கள். அந்த தலைப்புடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் சிம்புவின் லுக் ரசிகர்களுக்கு  ஆச்சரியத்தை கொடுத்து இருந்தது.

Simbu

சென்னையில் இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவு காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிம்புவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அது கொரானா வைரஸ் தொற்று இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது .

இதனால் இந்த தகவல் அறிந்த சிம்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. சிம்பு விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். நேற்று 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

புதியது பழையவை